மஹாபாரதம்

 

 Image

என்னை வேறு மனிதனாக்கிய காவியம். இது எத்தனை பேரின் மனங்களை மாற்றியிருக்கும் என்று சிந்தித்தேன். அதன் கதைக்களம், கதை சொல்லும் பாங்கு, கிளைக் கதைகள், கதைகளுக்குள் முடிச்சு. கதையின் நீளம் என்று எதைப் பார்த்தாலும் பிரம்மிப்பாக இருந்தது.

        ஆனால், தற்போது தமிழ்நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் எத்தனை பேர் இதைப் படிப்பார்கள் என்ற கவலையும் உள்ளது. எனது இளவயதில் என் தாய் எதற்கெடுத்தாலும் மஹாபாரதக் கதை சொல்லியே ஒரு செயலை விளக்குவார். அப்போதெல்லாம் எனக்கு எரிச்சலாக இருக்கும். ‘என்னடா எதற்கெடுத்தாலும் ஒரு கதையா?’ என்று நினைப்பேன்.
        என் அதிர்ஷ்டம் தூர்தர்ஷனில் மஹாபாரதம் தொடராக வந்தது. அப்போதெல்லாம் இரண்டே சேனல்கள்தானே, வேறு வழியே இல்லை இந்தியாக இருந்தாலும் அத்தொடரைப் பார்த்துத்தான் ஆகவேண்டும். அந்தத் தொடரில் வரும் துரியோதனன், பீஷ்மர், அர்ஜூனன், கிருஷ்ணன் பாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டன. அதன் பிறகு எனது தாய் கதை சொல்ல ஆரம்பிக்கும்போதெல்லாம் ஆர்வமாகக் கேட்கத்தொடங்கினேன். ஞாயிற்றுக்கிழமையானால் எப்போது மஹாபாரதம் போடுவார்கள் என்று ஏங்கத் தொடங்கினேன்.
        அப்போதெல்லாம் என் தந்தை துக்ளக் பத்திரிகை வாங்குவார். அந்த பத்திரிக்கையைச் சீண்டக்கூட மாட்டேன். திடீரென்று ஒருநாள் அந்த பத்திரிக்கையின் ஒரு பக்கம் விரிந்து கிடந்தது. அதில் டி.வி. தொடர் தமிழ் வசனங்களுடன் அப்படியே இருந்தது. அதையும் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். பள்ளிப்புத்தகங்களைத் தவிர்த்து வேறு புத்தகங்களைப் படித்தது அதுவே முதல் முறை. அந்தத் தொடரில் திரு.சோ அவர்கள் ஆங்காங்கே வியாச பாரத்தில் இப்படியிருக்கும் ஆனால் இந்த டி.வி. தொடரில் இப்படி இருக்கிறது என்று கோடிட்டுக் காட்டுவார். ‘ஆகா! வியாச பாரதம் தானே மூலம். அதை நம்மால் படிக்க முடியவில்லையே’ என்று நினைக்க ஆரம்பித்தேன்.
        ஒரு நாள் பள்ளிக்கு என் தந்தையுடன் செல்லும்போது, தெருவோரத்தில் ஒரு புத்தகக்கடையில் ராஜாஜி எழுதிய மஹாபாரதம் என் கண்களைக் கவர்ந்தது. என் தந்தையிடம் எனக்கு அது வேண்டும் என்று கேட்க பயம். வீட்டிற்குச் சென்று என் தாயாரிடம் கேட்டேன். “நீலாம் அது படிக்க முடியாதுப்பா. வளந்த பிறகு அம்மா வாங்கித் தரேன்” என்றார் என் தாயார். எனக்கு வருத்தமாகிவிட்டது.
        டிப்ளமா முதல் ஆண்டு சேர்ந்தேன். இப்போது என் கைகளில் பேருந்து மற்றும் உணவு செலவுக்காக வீட்டில் கொடுக்கும் பணம் சேர ஆரம்பித்தது. ஒரு நாள் ஒரு புத்தகக் கடையில் மகாபாரதம் பளிச்சிட்டது. நான் யோசிக்கவே இல்லை, வாங்கிவிட்டேன். அதைப் படித்த பிறகும் திருப்தி ஏற்படவில்லை. முழுவதும் அறிய முடியவில்லையே என்ற ஏக்கம்.
        பின்னர் துக்ளக்-ல் சோ அவர்களே புதிய தொடராக மஹாபாரதம் பேசுகிறது எழுத ஆரம்பித்தார். வாராவாரம் அதைப் படிக்க ஆரம்பித்தேன். ‘சே! என்னடா இந்தவாரம் இவ்வளவு சுருக்கமா போயிடுச்சேன்னு’ நினைப்பேன். பிறகு “மஹாபாரதம் பேசுகிறது” என்று புத்தகங்களாகவே இரண்டு வால்யூமாக வெளியிட்டார் சோ. எங்கு கிடைக்கும், தேடினேன், கிடைக்கவில்லை. மயிலாப்பூர் அலயன்ஸ் கம்பெனியில் கிடைக்கும் என்று துக்ளக்கில் விளம்பரம் வந்தது. விலை ரூ.500/- என்று நினைக்கிறேன். என் தாயிடம் கேட்டேன். “கண்ணா! அவ்வளவுலாம் செலவிடக்கூடாதுப்பா” என்றார்கள். இரண்டு நாள் அடம்பிடித்து, கைகளில் பணத்தை வாங்கிக் கொண்டு, மையிலாப்பூர் சென்று புத்தகங்களை  வாங்கிவிட்டேன். நோபல் பரிசு பெற்றது போன்ற உணர்வு.
        அதைப்படித்து, ‘டிவி மஹாபாரதத்திற்கும், ஒரிஜினல் மஹாபாரதத்திற்கு எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது’ என்று நினைத்தேன். ஒரு வாரத்தில் படித்து முடித்தேன். என் தாய் ஆச்சரியப்பட்டார். மஹாபாரதத்தில் சில கதைகள் பற்றி நானும் என் தாயும் வாதிட ஆரம்பித்தோம். என் தாய் “என்னை விட உனக்கு அதிகமாகத் தெரிகிறதே” என்று பெருமிதமாகச் சொன்னார். ஆனால், திரு.சோ அவர்களும் இது வெறும் சுருக்கம்தான், முழுமையானது அல்ல என்று குறிப்பிட்டுவிட்டார். சருக்கமே ரூ.500/-, முழுமையானது என்றால் ‘ஆகா! இந்த ஜென்மத்துல படிச்சு முடிக்க மாட்டோம்’னு நினைத்தேன்.
        பல வருடங்களுக்குப் பிறகு எனது வீட்டில் கம்ப்யூட்டர் வந்தது, இன்டர்நெட் வந்தது. ஏதோ தேடப் போக, Sacredtexts வலைத்தளத்தில் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் “மஹாபாரதம்” ஆங்கில மொழி பெயர்ப்பு இலவசமாக முழுமையானப் பதிப்பாகக் கிடைத்தது. A4 அளவு பக்கத்தில், 9 புள்ளி எழுத்துருவில் 2222 பக்கங்கள் வந்தது. பெயர்க்குறிப்புகள் வரும் இடம் எல்லாம் எனக்கு சுவாரசியமாகவே இல்லை. அவை வரும்போதெல்லாம் அப்பக்கங்களைத் தவிர்த்துவிட்டு கதைக்குச் சென்றுவிடுவேன். கதையின் பிரம்மாண்டத்தை உணர்ந்தேன். எத்தனைக் கிளைக் கதைகள் அத்தனைக்கும் ஆசிரியரின் முடிச்சு. அப்பப்பா. இனி எந்த ஒரு புத்தகமும் இதன் உச்சத்தை எட்ட முடியாது என்று நினைக்கத் தோன்றியது.
        நாம் ஆரம்பித்து முடிக்கவே 20 வருடங்கள் பிடித்தனவே. இனி வரும் இளைய தலைமுறை இதை எப்படிப் படிக்கும். சுருங்கச் சொல்வதில் பலனில்லை. முழுவதுமான தமிழ் மொழிபெயர்ப்பு என்றால் (இருக்கிறதா என்று கூட எனக்குத் தெரியாது) அது எவ்வளவு விலையிருக்கும். வாங்கிப் படிப்பார்களா? இப்படியே மறைய வேண்டியதுதானா இப்படி ஒரு ஞானப் பொக்கிஷம். எனக்கு இப்போது திரு.சோவை நினைக்க நினைக்க கோபமாக வந்தது. ஏன் சுருங்கச் சொல்லவேண்டும். முழுவதும் சொல்லியிருந்தால் எத்தனை பேர் இதற்குள் (துக்ளக் எப்படியும் வாங்கத்தான் போகிறார்கள்) இலவசமாக மஹாபாரதம் தெரிந்திருப்பார்கள்.
        எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. தமிழ், ஆங்கிலம் மட்டும்தான் தெரியும். என் சிற்றறிவுக்கு எட்டியவரை மஹாபாரதத்தை ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழுக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறேன். இது என்னால் முடியுமா தெரியவில்லை. பரமன் மீது பாரத்தைப் போட்டு ஆரம்பிக்கிறேன். “நீ என்ன அவ்வளவு பெரிய ஆளாடா?” என்று கேட்காதீர்கள். நான் பாமரன்தான், என்னைவிடவும் பாமரர்கள் இலவசமாகப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவேத் தொடங்குகிறேன்.
        பெரியவர்கள், மஹாபாரத அறிஞர்கள் என்னனை மன்னிக்க வேண்டும். பிழையிருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்த முயல்கிறேன். ஆதிபர்வம் பகுதி 1 ஒரு வருடத்திற்கு முன் சும்மா விளையாட்டாக மொழிபெயர்ப்பு செய்தேன். அதைத் திரும்பவும் இந்தப் பதிப்பிற்காக மொழிபெயர்ப்பு செய்ய வேண்டுமா என்று யோசித்தேன். வேண்டாம் என்று அப்படியே தருகிறேன். இனி வரும் பகுதிகளில் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தி மொழி பெயர்க்க முயல்கிறேன். இனிதான் மொழிபெயர்க்க வேண்டும். நன்றி!

– செ.அருட்செல்வப் பேரரசன்

03/01/2013

பிரபஞ்சத்தின் பாடகன்

பாரதி: பிரபஞ்சத்தின் பாடகன்

பாரதியார் பிறந்தநாள்: டிசம்பர்-11, 1882

தமிழின் தலைமகன்களில் ஒருவரான பாரதியைக் கொண்டாடுவோம்

ஓடி விளையாடும் பாப்பாவாக நாம் இருக்கும்போது நம் அன்னையரிடமிருந்தும் அதற்குப் பிறகு ஆரம்பக் கல்வியில் பள்ளிக்கூடத்திலும் வாஞ்சையான தகப்பனைப் போல பாரதி நமக்கு அறிமுகமாகிறார். கூடவே, ‘அச்சம் தவிர், ஆண்மை தவறேல்’ என்று ஆத்திசூடி மூலமும், ‘ஒளிபடைத்த கண்ணினாய் வாவா…’ ‘அச்சமில்லை அச்சமில்லை’ போன்ற உத்வேகம் மிக்க முழக்கங்களாலும் பாரதி மேலும் நம்முள் ஆழமாக ஊன்றப்படுகிறார். அப்புறம், தேசப் பற்றுப் பாடல்கள், மொழிப் பற்றுப் பாடல்கள். அதற்குப் பிறகு பாரதி நம்முடன் திரைப்படங்கள் வழியாகவும் உறவுகொள்கிறார்.

பாரதியின் பல்வேறு பாடல்கள் திரைப்படங்களிலும், பாரதியின் பல்வேறு வரிகள் திரைப்படத் தலைப்பு களிலும் இடம்பிடித்திருக்கின்றன. நாவல்களுக்கோ கவிதைத் தொகுப்புகளுக்கோ தலைப்பு கிடைக்கவில்லை என்றாலும் பாரதிதான் உதவிக்கு வருகிறார். அதுமட்டுமா? ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’ வரிகள் இல்லை என்றால், ஊழல்

ரசியல்வாதிகள் என்ன செய்வார்கள் என்பதையே நினைத்துப்பார்க்க முடியவில்லை.

இப்படியாக நம் சமூகத்தின் கலை, பண்பாடு, அரசியல் என்று எல்லாவற்றுக்கும் விதைநெல் களஞ்சியமாக பாரதி இருப்பது, எந்த அளவுக்கு நம் சமூகத்தில் இன்றியமையாத ஒருவராக அவர் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

ஆனால், பாரதி அவ்வளவு மட்டுமா? உண்மையான பாரதியை, அதாவது முழுமை பெற்ற (அல்லது முழு மையை முயன்ற) பாரதியை அறிந்துகொள்ள நாம் இன்னும் கொஞ்சம் பாரதிக்குள் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பயணத்தின் பாதி வழியில், ‘பாரதிதான் என்ன?’ என்ற கேள்வி வரும்.

சுடர் விடும் சொல்

ஒரே ஒரு சொல்லைத் தேடியவர்தான் பாரதி. ‘சொல் ஒன்று வேண்டும். தேவ சக்திகளை நம்முள்ளே நிலை பெறச் செய்யும் சொல் வேண்டும்’ என்று தவம் கிடந்தவர் தான் பாரதி. எதற்காக அந்த ஒரு சொல்லைத் தேடினார்? அந்த ஒரு சொல்தான் என்ன?

அந்தச் சொல் உண்மையில் சொல் அல்ல; சுடர். ‘சொல்லில் விளங்கும் சுடரே சக்தி’ என்று பாரதி சொன்னது அதனால்தான். நவமெனச் சுடர் தரும் உயிரில் பாரதி அந்தச் சொல்லைக் கண்டுகொண்டார். சொல்லைச் சுடராக்கி அதில் உடல், பொருள், ஆவி அனைத்துக்கும் தீ மூட்டினார். அப்படித் தீ மூட்டாமல் பாதுகாப்பாக இருந்திருந்தால் வெறும் ‘குடும்பஸ்தன்’ கவியாகவே பாரதி மிஞ்சியிருப்பார். ‘புலன்களைக் குலைத்துப் போடும்’ விபரீத விளையாட்டின் மூலம் தன் உச்சபட்சக் கவித்துவத்தைச் சாதித்துக்கொண்ட பிரெஞ்சுக் கவிஞன் ரைம்போவைப் போலத்தான் பாரதியும்.

நிலவொளிப் பாடகன்

இத்தாலியக் கவிஞன் லெப்பர்டியின் கவிதைகுறித்து இதாலோ கால்வினோ இப்படிச் சொல்லியிருக்கிறார்: ‘அவர் கவிதைகளில் அதிசயம் என்னவென்றால், மொழியை அதன் சுமையிலிருந்து விடுவித்து, கிட்டத்தட்ட நிலவொளிபோல் ஆக்கிவிடுகிறார்.’ இது பாரதியின் கவிதைகளுக்கு முற்றிலும் பொருந்தும். பாரதியின் பல கவிதைகளை அர்த்தங்களுக்காக ரசிப்பதைவிட, கார்த்திகை அகல்போல அவை விடும் அமைதியான சுடருக்காக நாம் ரசிப்பதே அதிகம்.

‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’என்ற பாடலை அது சொல்லும் பிரபஞ்ச ஒருமைக்காக ரசிப்பதைவிட, அதன் கவித்துவ அமைதிக்காகத்தான் அதிகமாக ரசிக்கிறோம். பிய்த்துப் பிய்த்து அர்த்தம் காண முயலும்போது அந்தப் பாடல் தன் அழகை இழந்துவிடும், அதன் அர்த்தம் ஆழமானது என்றாலும்கூட. இந்தப் பாடலின் அழகே அர்த்தத்தை சொற்களின் வழியாக இல்லாமல், உணர்வின் வழியாக நமக்கு ஊட்டுவதுதான். புத்தரின் சாந்தமான முகம் நமக்கு உணர்த்துவது போன்றது இது.

இதை உணர்ந்துகொள்ளும்போது பாரதியின் முக்கியமான, அறுதிப் பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம். இந்த இடத்தில் நமக்கு இரண்டு வகையான பாரதி கிடைக்கிறார். விட்டு விடுதலையாகத் துடிக்கும் பாரதியும் பிரபஞ்ச ஒருமை காணும் பாரதியும். உண்மையில், இந்த இரண்டு பாரதிகளுமே ஒருவருக்கொருவர் நிறைவு செய்பவர்களே. எனவே, விட்டு விடுதலையானதால் பாரதியால் பிரபஞ்ச ஒருமையைக் காண முடிந்தது என்றும் சொல்லலாம்.

ஞானியும் பித்தனும்

பிரபஞ்ச ஒருமையைக் காணும்போது ஒரு பக்கம் ஞானிபோலவும் இன்னொரு பக்கம் பித்தன் போலவும் ஆகிவிடுகிறார் பாரதி. ஞானியின் குரலுக்கு வசன கவிதைகள் சாட்சியாவதைப் போல, பித்தனின் குரலுக்கு ‘ஒளியும் இருளும்’, ‘ஊழிக் கூத்து’, ‘காளி’ போன்ற கவிதைகளும், பாஞ்சாலி சபதத்தில் வரும் மாலை வருணனையும் சாட்சியாகின்றன.

பாஞ்சாலி சபதத்தில், அமைதியான மாலைப் பொழுதை பாஞ்சாலியுடன் ரசித்துக்கொண்டிருக்கும் அர்ஜுனனுக்கு ஒவ்வொரு கணமும் காளி கவிதை செய்வ தாகப் படுகிறது. திடீரென்று, அர்ஜுனனுக்குள் பாரதி புகுந்துகொள்ள, பிதற்ற ஆரம்பிக்கிறான் அர்ஜுனன்:

“பார்! சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில்

எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!

என்னடீ யிந்த வன்னத் தியல்புகள்!

எத்தனை வடிவம்! எத்தனை கலவை!

தீயின் குழம்புகள்! – செழும்பொன் காய்ச்சி

விட்ட வோடைகள்! – வெம்மை தோன்றாமே

எரிந்திடுந் தங்கத் தீவுகள்! – பாரடீ!

நீலப் பொய்கைகள்! – அடடா, நீல

வன்ன மொன்றி லெத்தனை வகையடீ!

எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்

எத்தனை! – கரிய பெரும் பெரும் பூதம்!

நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்

தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட

கருஞ் சிகரங்கள்! – காணடி யாங்கு

தங்கத் திமிங்கிலந் தாம்பல மிதக்கும்

இருட்கடல்! – ஆஹா! எங்கு நோக்கிடினும்

ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!”

அமைதியான குளத்தின் மீது பெருமழை வீழ்ந்து குளத்தின் மேற்பரப்பைத் தத்தளிக்க வைப்பதுபோல் மொழியைத் தத்தளிக்க வைக்கிறார் பாரதி. மொழி பதறுகிறது; சாமியாடுகிறது. அர்த்தங்கள் மொழியை விட்டு ஓட, திகைப்பே அர்த்தமாகிறது. அந்தத் தத்தளிப்பை அப்படியே முன்வைக்கிறார் பாரதி. ‘நீல வன்ன மொன்றி லெத்தனை வகையடீ!’ என்று படிக்கும் போது, அடடா! அடடா! என்று பதற வைக்கிறாரல்லவா பாரதி. எப்படிப்பட்ட இயற்கை உபாசகர் அவர்!

இயற்கையை காளியின் நடனமாகப் பார்த்தவர் பாரதி,

அதனால்தான்,

‘அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று

வில்லை யசைப்பவளை – இந்த

வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியை’

என்று காளியைப் பாடுகிறார். சொற்கள் எப்படித் தாண்ட வமாடுகின்றன! குறிப்பாக, ‘வினைச்சி’என்ற சொல்லைப் பாருங்கள். பாரதியைத் தவிர, வேறு யார் இந்தச் சொல்லை உருவாக்கியிருக்க முடியும்?

பிரபஞ்ச ஒருமை

இன்னொரு உருவம் அமைதியான பாரதி. “வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர் -இவை ஒரு பொருளின் பல தோற்றம். உள்ளதெல்லாம் ஒரே பொருள், ஒன்று. இந்த ஒன்றின் பெயர் ‘தான்’ ” என்று சொல்லும் பாரதி. இதுதான் பிரபஞ்ச ஒருமை என்பது.

விட்டு விடுதலையாகாமல், பிரபஞ்ச ஒருமை காண்பது சாத்தியம் இல்லை. எவ்வளவு சுமைகளைத் தாங்கிக் கொண்டு திரிகிறோம்! குடும்பம், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாலிசி, தேர்தல்கள், தெரு, மொழி, இனம், தேசம், எல்லைக் கோடுகள், போர்கள்… எவ்வளவு ஒழுங்குகள்! எல்லாமே கடமை களாகி நம் மேல் சுமை கவிந்துவிட்டது. ஒருவர் இவ்வளவு சுமைகளையும் சுமந்துகொண்டு கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தின் பெயர்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது.

பாரதி இந்தச் சுமை தூக்கும் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள விரும்பவில்லை. ‘விட்டு விடுதலையாகி’ சிட்டுக்குருவியைப் போல ‘எட்டுத் திசையும் பறந்து’ திரிந்து, ‘மட்டுப்படாதெங்கும் கொட்டிக் கிடக்கும் இவ்வானொளியென்னும் மதுவின் சுவையை’ உண்ணவே விரும்பினார். இதற்காகச் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே, ஒரு தொழிலே என்கிறார்:

“யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்

என்மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா;

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;

உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்.”

அன்பு எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கும். இதுதான் பாரதி இந்த உலகுக்கு அளிக்கும் செய்தி. இதனால்தான் பாரதி நம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்குமே கவியாகிறார்.

– ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

Thanks :http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article6681404.ece

ஓர் உரை

‘திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கி’ல் ஓர் உரை

(18-07-2015 அன்று கோவையில் ‘மாலதி பதிப்பகத்தார்’ திரு. ரா. பத்மநாபன் எழுதிய ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ (மூலம் – தமிழாக்கம்) நூல் அறிமுகத்தையும், திரு நாஞ்சில் நாடன்அவர்களின் 40 ஆண்டு எழுத்துப் பணிக்குப் பாராட்டு விழாவையும் ஒரு சேர நிகழ்த்தினார்கள். அதில் திரு. வ. ஸ்ரீநிவாசன் பேசியது.
 

அனைவருக்கும் வணக்கம்.

Nanjil_Nadan_VaSri_Events_Lectures_Talks_Stage_Meets_Shrinivasan

நான் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் அருளிய பகவத் கீதையை வாசித்ததில்லை. பொதுவாக, பரவலாக ஒரு சராசரி தமிழனுக்கு கீதையைப் பற்றி எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் – ஒருவேளை அதற்கும் குறைவாகத்தான் –  எனக்குத் தெரியும். ஒருகால் கண்ணன் அதை தமிழிலே இசைத்திருந்தால் ‘காற்றினிலே வரும் அந்த கீத’த்தை நான் கேட்டிருந்திருக்கக் கூடும்; படித்திருந்திருக்கக் கூடும். இல்லாது போனாலும் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் அதைப் பற்றி நிச்சயமாக எழுதியிருப்பார்கள். அப்போது நானும் நிச்சயமாக அதைப் படித்திருப்பேன், ‘சிற்றிலக்கியங்களை’யும், ‘கம்பனின் அம்பறாத் தூணி’யையும் படித்த மாதிரி.

  

 

நான் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் அருளிய பகவத் கீதையை வாசித்ததில்லை. பொதுவாக, பரவலாக ஒரு சராசரி தமிழனுக்கு கீதையைப் பற்றி எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் – ஒருவேளை அதற்கும் குறைவாகத்தான் –  எனக்குத் தெரியும். ஒருகால் கண்ணன் அதை தமிழிலே இசைத்திருந்தால் ‘காற்றினிலே வரும் அந்த கீத’த்தை நான் கேட்டிருந்திருக்கக் கூடும்; படித்திருந்திருக்கக் கூடும். இல்லாது போனாலும் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் அதைப் பற்றி நிச்சயமாக எழுதியிருப்பார்கள். அப்போது நானும் நிச்சயமாக அதைப் படித்திருப்பேன், ‘சிற்றிலக்கியங்களை’யும், ‘கம்பனின் அம்பறாத் தூணி’யையும் படித்த மாதிரி.

 

நான்நா எவ்வளவு தெரியுமோ ன் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் அருளிய பகவத் கீதையை வாசித்ததில்லை. பொதுவாக, பரவலாக ஒரு சராசரி தமிழனுக்கு கீதையைப் பற்றி எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் – ஒருவேளை அதற்கும் குறைவாகத்தான் –  எனக்குத் தெரியும். ஒருகால் கண்ணன் அதை தமிழிலே இசைத்திருந்தால் ‘காற்றினிலே வரும் அந்த கீத’த்தை நான் கேட்டிருந்திருக்கக் கூடும்; படித்திருந்திருக்கக் கூடும். இல்லாது போனாலும் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் அதைப் பற்றி நிச்சயமாக எழுதியிருப்பார்கள். அப்போது நானும் நிச்சயமாக அதைப் படித்திருப்பேன், ‘சிற்றிலக்கியங்களை’யும், ‘கம்பனின் அம்பறாத் தூணி’யையும் படித்த மாதிரி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நான் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் அருளிய பகவத் கீதையை வாசித்ததில்லை. பொதுவாக, பரவலாக ஒரு சராசரி தமிழனுக்கு கீதையைப் பற்றி எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் – ஒருவேளை அதற்கும் குறைவாகத்தான் –  எனக்குத் தெரியும். ஒருகால் கண்ணன் அதை தமிழிலே இசைத்திருந்தால் ‘காற்றினிலே வரும் அந்த கீத’த்தை நான் கேட்டிருந்திருக்கக் கூடும்; படித்திருந்திருக்கக் கூடும். இல்லாது போனாலும் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் அதைப் பற்றி நிச்சயமாக எழுதியிருப்பார்கள். அப்போது நானும் நிச்சயமாக அதைப் படித்திருப்பேன், ‘சிற்றிலக்கியங்களை’யும், ‘கம்பனின் அம்பறாத் தூணி’யையும் படித்த மாதிரி.

 

நான் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் அருளிய பகவத் கீதையை வாசித்ததில்லை. பொதுவாக, பரவலாக ஒரு சராசரி தமிழனுக்கு கீதையைப் பற்றி எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் – ஒருவேளை அதற்கும் குறைவாகத்தான் –  எனக்குத் தெரியும். ஒருகால் கண்ணன் அதை தமிழிலே இசைத்திருந்தால் ‘காற்றினிலே வரும் அந்த கீத’த்தை நான் கேட்டிருந்திருக்கக் கூடும்; படித்திருந்திருக்கக் கூடும். இல்லாது போனாலும் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் அதைப் பற்றி நிச்சயமாக எழுதியிருப்பார்கள். அப்போது நானும் நிச்சயமாக அதைப் படித்திருப்பேன், ‘சிற்றிலக்கியங்களை’யும், ‘கம்பனின் அம்பறாத் தூணி’யையும் படித்த மாதிரி.

 

 

 

 

 

 

 

 

 

 

1975 அவர் எழுத்து முதன் முதலில் பிரசுரம் ஆகியிருக்கிறது. 2001ல்தான் நான் அவரை முதன் முதலில் படித்தேன். 26 ஆண்டுகால நீண்ட இடைவெளி. காரணம் அந்தப் பெயர். ஒருவேளை அவர் எழுத்தில் அரசியல் நெடி அடிக்குமோ என்கிற தயக்கம். படித்தபின் தான் தெரிந்தது அந்த எழுத்து தரமற்ற அரசியலை, அறமற்ற அரசியலைத்தான் அடிக்குமேயன்றி அதிலிருந்து எந்த நெடியும், வாடையும் அடிக்காது என்பது; மேலும் அதில் தமிழ் மணமே கமழுமென்பதும்.

முதலில் படித்தது அவரது ஆறாவது நாவலான ‘எட்டு திக்கும் மத யானை’. என்னவொரு தலைப்பு ! எவ்வளவு அழகான, கவித்துவமான அனைத்தையும் விட முக்கியமாக, பொருத்தமான தலைப்பு ! நாவலைப் படித்ததும் அதன் செறிவு, செழுமை, நுட்பம், சுவாராஸ்யம், அந்தத் தமிழ்.. ..  இவற்றில் மனதைக் கொடுத்தேன். உடனே அதுவரை என் வாழ்நாளில் செய்யாத ஒரு வேலையை முதன் முதலில் செய்தேன். ஓர் எழுத்தாளரை நானே நேரடியாகத் தொடர்பு கொண்டேன். திருச்சியில் இருந்த நான் கோவையில் இருந்த அவரோடு தொலைபேசியில் பேசினேன். நாவலில் நான் ரசித்த இடங்களை, விஷயங்களைப் பற்றிச் சொன்னேன். என் புகழ் வார்த்தைகள் அவரிடம் எந்த ஒரு புளகாங்கிதத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிந்தது. அதனால் எனக்கு அவர் மீதான மதிப்பு வளர்ந்தது. கொஞ்சம் பிறகு W. H. ப்ராடியின் விற்பனைப் பிரிவு உயர் அதிகாரியாக அவரும், கனராவங்கியிலிருந்து சமீபத்தில்தான் விருப்ப ஓய்வு பெற்ற முதுநிலை மேலாளராக நானும் பேசத் துவங்கினோம்.

“என் மகள் +2 எழுதியிருக்கிறாள். அவளுக்கு எந்த ஊரில் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ அந்த ஊருக்குப் போக வேண்டும்” என்று சொன்னேன். அவர் உடனே சொன்னார் “கோயம்புத்தூருக்கே வந்துடுங்க. நாங்கள்ளாம் இருக்கோம்ல”.

கவி வாக்கு பலித்தது. ஓரிரு மாதங்களில் என் மகளுக்கு கோவை ஜிசிடியில் இடம் கிடைத்து நாங்கள் கோவை வந்தோம்.

அவரை முதன் முதலில் நேரடியாக சந்தித்தது ‘மண்ணுள்ளிப் பாம்பு’ நூல் வெளியீட்டு விழாவில்தான். மேடையில் பேசுகையில் அவர் சொன்னார் : ” இந்தக் கவிதைகள் குறித்து உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன விமர்சனங்கள் உள்ளனவோ அவை அனைத்தும் எனக்கும் இருக்கின்றன.” தன் நூல் பற்றி தனக்கே விமர்சனமாம். அதுவும் ஒன்றிரண்டு இல்லை. ஒவ்வொருவருக்கும் இருக்கும் அத்தனை விமர்சங்களுமாம். எழுதியவரே சொல்கிறார். அவருக்கு அகந்தை என்பதே கிடையாது. அகந்தை இல்லாத இடத்தில் கண்ணன் இருக்கிறான். அவன் ‘மதுர மோஹன கீத’மும் இருக்கிறது.

அதே ஆண்டு விஜயதசமி தினத்தன்று அவருக்கு இதய சிகிச்சை நடந்தது. அந்த சமயத்தில்தான் அவரது இல்லத்தில் சென்று அவரைச் சந்தித்தேன். அப்புறம் சில ஆண்டுகள் கோவை, 4 ஆண்டுகள் சென்னை, மீண்டும் கோவை, மீண்டும் 2 1/2 ஆண்டுகள் திருச்சி மீண்டும் இப்போது கோவை என்று இருந்த போதிலும் எங்கள் நட்பு தொடர்ந்து வருகிறது.

Author_Va_Srinivasan_Solvanam_Writers_Speech

26 ஆண்டுகளாக இவரைப் படிக்காமல் விட்டோமே என்கிற குறை இருந்த போதிலும் அதில் ஒரு பெரும் அனுகூலமும் இருந்தது. படிக்க அவர் ஏற்கனவே எழுதியவை எத்தனை இருந்தன? அது தவிர அவர் ‘கரென்டாக’ எழுதுவதும்.

எத்தனை விஷயங்கள் எழுதுகிறார். எவ்வளவு தகவல்கள், தாவரங்கள், மரங்கள், மனிதர்கள், சூழல்கள், மண்கள், குணங்கள், க்ரோதங்கள், த்ரோகங்கள், தயை, அன்பு, கருணை…எத்தனை? எப்படி இவ்வளவும் அவருக்கு எழுத முடிகிறது? அந்தக் ‘கொள்கலன்’ மிகவும் பெரியது. அதில் மிகப் பெரிய இடத்தை அடைத்துக் கொள்ளும் தன் முனைப்பு என்பகிற பொருளும் வேறு அடைத்துக் கொண்டிருக்கவில்லை. தகவல்கள், தமிழ், கிரஹிப்பு மட்டுமல்ல அந்தக் கொள்கலன் மிகப் பெரியதாய் இருப்பதால்தான் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், வாசகர்கள் என்கிற மிகப் பெரிய எண்ணிக்கையிலான மனிதர்களையும் அது கொள்கிறது. அதனால்தான் எல்லோருக்கும் ஒதுக்க நேரமும், கொடுக்க இடமும் அவரிடம் இருக்கிறது. அது ஒரு கனிந்த பரந்த தமிழ் இதயம்.

இவ்வளவு வாசகர்கள் இருந்த போதிலும் அவரது முதல் வாசகன், முதன்மை வாசகன் நான்தான். என்னடா இது இப்போதுதான் அகந்தையை, தன்முனைப்பைத் தாக்கி விட்டு இவ்வளவு தன் முனைப்பு கொப்புளிக்கும் ஒரு கூற்று என்று நீங்கள் நினைக்கலாம். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். சொல்வனத்துக்கு அவர் எழுதுபவற்றின் கையெழுத்துப் பிரதியை முதலில் வாசிப்பது நான்தான். பின்னர்தான் அவை தட்டச்சு செய்யப் பட்டு பிரசுரமாகும். ஆக ஒரு சில எழுத்துக்களுக்காவது நான் முதல் வாசகன். இந்த மாதிரி ‘ ப்ரொடெக்டிவ் க்ளாஸஸ்’ ‘டிஸ்க்ளெய்மர்ஸ்’ இல்லாமல் அவரது முதன்மை வாசகன் நான் தான். ஏன் என்று இதோ சொல்கிறேன்.

2001 ல் அவருக்கு அவர் இதயத்தில் எந்த ரத்தக் குழாயில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டதோ 2011ல் எனக்கு என் இதயத்தில்  அதே ரத்தக் குழாயில் அதே இடத்தில் அடைப்பு ஏற்பட்டது. அவர் மேற்கொண்ட அதே சிகிச்சையை மேற்கொண்டு நானும் குணமடைந்தேன். மறு நாள் சிகிச்சை நடக்கப் போகிறது. இன்று ‘டயக்னோஸிஸ் ரிபோர்ட்’ வந்து விட்டது. அதை நாஞ்சிலின் மகள் டாக்டர் சங்கீதாவிடம் காட்டினேன். அவங்க உடனே சொன்னாங்க “அங்கிள், அப்பாவுக்கும் இதே இடத்தில் இதே மாதிரிதான் வந்தது” நான் உடனே சொன்னேன் “பாத்தியாம்மா ! உங்கப்பா வோட பெஸ்ட் வாசகன் நான்தான் என்பதற்கு இதை விட ப்ரூஃப் வேண்டுமா?”

நான் மருத்துவ மனையில் இருந்த அந்த நாட்களில் என்னோடு இருந்த இருவர் : ஒன்று திரு. நாஞ்சில் நாடன் இரண்டாவது : அவர் மகள் டாக்டர் சங்கீதா (அவர் எனக்கும் மகள்தான்)

“கோயம்புத்தூருக்கே வந்துடுங்க. நாங்கள்ளாம் இருக்கொம்ல”. சொன்னாரில்லையா முதன் முதலில் பேசியபோது. இருந்தார். இடுக்கண் களைவதுதானே நட்பு?

ஆனால் இது பற்றி அவர் ஒருவரிடமும் சொல்லியிருக்க மாட்டார். அவருக்கு இது நினைவில் இருந்தால்தானே சொல்வதற்கு. அவர் இது போல் பலருக்கும் உதவியிருக்கிறார். அவருக்கு இருக்கும் தன்னலம் மிக மிகக் கம்மிதான்.

இப்போது கூட மாலதி பதிப்பகத்தார் இந்த விழா எடுக்கவேண்டும் என்று பிரஸ்தாபித்தபோது அவர் என்னிடன் தொலைபேசியில் சொன்னார் “ஆடிட்டர் தப்பா நினைச்சுக்கப் போறார். அவர்ட்ட சொல்லிடுங்க. பெரிய விழாவெல்லாம் வேண்டாம். எப்படியும் பகவத் கீதை அறிமுக விழா இருக்கு. அதில் என்னைக் கூப்பிட்டு ஒரு ஷால் போட்டாப் போறும்”

சகிப்புதன்மை

பதவியில் இருப்பவனே சகிப்புதன்மை அற்றவனாகிறான்

nanjil nadan01vikatan
ச. மோகனப்பிரியா
தேனியைச் சேர்ந்த எழுத்தாளர் மா.காமுத்துரை எழுதிய ‘புழுதிச்சூடு’ என்ற நூல் வெளியீட்டு விழாவிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேனி வந்திருந்தார்.
அவரிடம் சில முன்வைத்தோம்.
சகிப்புத்தன்மை குறித்து எழுத்தாளராக உங்கள் பார்வை?
அமைதியின்மை, பொறுமையின்மை என்கிறது சமூகத்தில் அதிகமாக இருக்கு. மக்களுக்கு இந்த மாதிரியான அழுத்தம் அதிகமா இருக்கு. வீட்டுல தொடங்கி, அலுவலகம், வெளியிடம்-ன்னு தொடர் நெருக்கடி. அதுமட்டும் இல்லாம அடிப்படையான ஒன்று புரிதல் என்பது இப்ப இல்லாமயே போய்டுச்சு. ஒருவர் இன்னொருவரை வெறுக்கும்போது எப்படி புரிஞ்சுக்க முடியும். உங்கள வெறுக்குறதுக்கு ஆயிரத்து எட்டு காரணம் இருக்கலாம், அதுமட்டுமில்லாம இப்ப புத்தகம் படிக்குற பழக்கம் இல்லாமயே போய்டுச்சு. லிசனிங் மியூசிக்ன்றது வெறும் குத்துபாட்டு கேக்குறது இல்ல. நம்மல அமைதி படுத்துறதா இல்லாம, இப்ப இருக்குற சினிமா பாடல்கள் ஏதோ ஒரு விதத்துல காமத்த தூண்டக்கூடியதா இருக்கு. இதேல்லாம் சேர்ந்துதான் இளஞர்களை ஒரு அமைதி இழந்த மனிதனாக்குகிறது.
இப்போது ஏன் இவ்வளோ வெள்ளபெருக்கு. மழை வஞ்சனையில்லாம பெஞ்சுகிட்டுதான் இருக்கு. நீர்போக்கு வழிகளையேல்லம் அடச்சுட்டோம். பிளாட் போட்டுட்டோம்; குளங்கள மூடிட்டோம். அது ஒரு காரணம். இன்னோன்னு, நாம குடிக்குற இளநீர், மக்காசோள கருது, பாலித்தீன் பை போன்றவற்றை போட வேண்டிய இடத்துல போடாம, எங்கேயே வீசுகிறோம். அதனால், தண்ணீர் தேங்கும் போது கொசு உற்பத்தியாகும். அதுனால டெங்கு வரும். இதற்கு நாம் அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் குறை சொல்லீட்டு இருக்கோம். ஆனா, தனிமனித பொறுப்பை மறந்துட்டோம்.
சமூக அக்கறை குறித்து பள்ளியிலோ, வீட்டிலோ நமக்கு போதிக்கப்படவில்லை. ஒரு தனிமனித சுதந்திரம் என்கிறது அடுத்தவனுடைய நுனி மூக்கிற்கு வரும் வரைதான். நம்முடைய செயலால் சக மனிதனுக்கு பாதிப்பு வரக்கூடாது. இதன் காரணமாகத்தான் சகிப்புத்தன்மை இல்லாம போய்டுச்சு. யாரையும் மரியாத இல்லாம பேசுறது; எடுத்தெறுஞ்சு பேசுறது. இதுவே மனிதனுக்கு சகிப்புத்தன்மை இல்லாது இருப்பதுக்கு பொதுவான காரணம் .
     Desktop Scenery Wallpaper                                           கடந்த ஒன்றரை வருடங்களா சகிப்புத்தன்மை அரசியல்ல இல்லாமை பற்றி?placeholder
மன்மோகன் சிங் பதவி ஏற்பு விழாவில் வாஜ்பாயும், மோடி பதவி ஏற்பு விழாவில் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார்கள். ஆனால், இது ஏன் தமிழ் நாட்டுல சாத்தியமா இல்லை. எல்லாரும் பொது சேவைல தான் இருக்காங்க. அப்படி இருக்கும்போது ஏன், இவன் வரும்போது நான் வரமாட்டேன்னு நேரம் பார்த்து வர்ராங்க. தமிழ்நாடு தவர வேற எங்கேயும் இத பார்க்க முடியாது. நான் இந்தியா முழுவதும் பயணம் செய்பவன். மகாராஷ்ராவிலோ, மத்திய பிரதேசத்திலோ இந்த மாதிரி பார்க்க முடியாது. ஏன்னா இந்த சேவைல நாம மறஞ்சுடுவோம். நாளைக்கு நமக்கடுத்து வேற ஒருத்தன். ஆனா இதுல ஏன் பங்கு வச்சுக்குறோம். இதெல்லாம் நமக்கு எடுத்துக்காட்டு. பாரம்பரியமா வருகிற நோய்க்கூறுகள்.
தற்போது எழுத்தாளர்கள் கருத்துரிமைக்கு எதிராக விருதுகளை திருப்பி அளிக்கின்றனர். அது பற்றி?
ஒரு படைப்பிலக்கியவாதி, தான் பாதிக்குற விஷயத்த சமூகத்துக்கு எடுத்து சொல்றார். இது தவிர ஒரு எழுத்தாளருடைய அரசியல் செயல்பாடு, பாலிட்டிக்ஸ் அல்ல. ஒரு ரைட்டரா தொடர்ந்து 10 ஆண்டுக்கு மேலாக சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துட்டு வர்றேன். என்னுடைய கருத்து, நான் இந்த நாட்டின் குடிமகன். நான் 40 வருடமா தொடர்ந்து எழுதிட்டு இருக்கேன். என்னுடைய எழுத்திற்கும் அரசாங்கம் மக்கள் வரிப்பணத்திலிருந்து தரக்கூடியதுதான் இந்த விருது என்பது. காங்கிரஸ் அரசு இருக்கும்போது எனக்கு விருது கிடைத்தது. ஆனால், அதுக்கும் விருதுக்கும் சம்மந்தம் இல்லை. சரியோ தப்போ நாம ஒரு அரச தேர்ந்தெடுத்துருக்கோம். அது எந்த கட்சியா இருந்தாலும் சரி. அந்த அரசின் கொள்கையும், நடவடிக்கையும் பிடிக்கவில்லை என்பதற்காக நாம் நம் குடியுரிமை ஆதாரத்தை திருப்பிதர முடியுமா. அதே போல்தான் விருதும். அதேபோல் விருது கொடுக்கும்போது கொடுத்த பணத்தை திரும்பி கொடுக்கமுடியுமா இன்றைய காலத்திற்கு ஏத்தமாதிரி. ஒரு எழுத்தாளருக்கு அரசியல் அறிவு இருந்தாலும் அவர்களுக்கு கருவியா செயல்பட விரும்பவில்லை.
சினிமாவை பற்றிய கடுமையான விமர்சனம் வைக்கும் எழுத்தாளர்கள், சினிமாவிற்கு வந்த பிறகு மாறுகிறார்களே?
சினிமாவைப் பற்றி கடுமையான விமர்சனம் நான் தான் வைக்கிறேன். எனக்கு சினிமாவுடன் அவ்வளவு தொடர்பு இல்ல. என்னுடைய தலைகீழ் விகிதங்கள் நாவல், ‘சொல்ல மறந்த கதை’ன்னு வெளிவந்தது. அதை ஷூட்டிங் அப்போ வேடிக்கை பார்க்க போவேன். தவிர, வொர்க் பண்ணது இல்ல. ‘பரதேசி’யில் நான் வொர்க் பண்னேன். பரதேசியினுடைய கதாநாயகன் ‘இடலாகுடி ராசா’ன்னு அந்த ரோல்ல தான் அதர்வா பண்ணாரு. ஆனால் பரதேசி ஒரு ஆங்கில நாவல். ‘ரெட் டீ’ தமிழில் ‘எரியும் பனிக்காடு’ஐ அடிப்படையாக கொண்டது. களத்திற்காக அதையும், கதாநாயகனுக்காக என்னையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் வசனம் எழுதினேன். அவை கதைக்காக பயன்படுத்தப்பட்டன.
பாலா மிகவும் அன்பான ஒரு மனிதர். பழகுவதற்கு மிகவும் இயல்பானவர். தமிழனுடைய மனதில் சினிமா ஆக்குபை பண்ற இடம் பயங்கரமான இடம். சினிமா நடிகர்களுக்கும், சினிமா போஸ்டர்களுக்கும் 60 அடில கட்டவுட் வெச்சு, அதற்கு பாலாபிஷேகம் பண்றது நம்ம ஊர்ல மட்டும்தான் நடக்கும். பாம்பேல நடக்காது, பாலிவுட்டில் நடக்காது.
இந்திய மொழிகளில் இந்தி பேசக்கூடிய மக்கள் கிட்டதட்ட 40%. தமிழ் பேசுகிற மக்கள் 9%. இதுல 40%க்கு எடுக்கப்படுகிற சினிமா படங்களும், 9% மக்களுக்கு எடுக்கப்படுகிற சினிமா படங்களின் எண்ணிக்கையும் கிட்டதட்ட சமம். சென்ற ஆண்டு 246 படங்கள் இந்தில வெளியானது. தமிழில் 216 படங்கள் வெளிவந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழுக்கு இணையான மக்கள் சதவீதம் கொண்ட மகாராஷ்டிராவில் வெறும் 59 படங்களே வெளியாகியுள்ளன. ஆக தமிழனுடைய வாழ்க்கையில் சினிமா ஒரு பயங்கரமான இடத்தை பிடித்திருக்கிறது. இதை வைத்து 4 படத்தில் நடித்தவுடன் அரசியலுக்கு வரலான்னு ஒரு நினைப்புல இருக்காங்க.
நான் 40 வருடமாக 40க்கும் மேற்பட்ட கதை எழுதியிருக்கேன். 10 நாவல் எழுதியிருக்கேன், பல விருதுகள் வாங்கிருக்கேன். ஆனாலும் என்னை தமிழகத்தில் 95% மக்களுக்கு தெரியாது. ஆனால், சினிமாவில் ஒரு சீனில் வந்து சிரிச்சுட்டு போறவங்கள உலகம் முழுக்க தெரியும். இந்த இன்ஃபுளுவன்சை பயன்படுத்திக்க நினைக்குறாங்க.
பாடகர் கோவன் கைது பற்றி?
அரசாங்கத்திற்கு சகிப்புதன்மை இல்லை. மதுவை பற்றி கருத்து சொல்ல அவருக்கு உரிமை இருக்கு. 128 கோடி இந்தியர்களும் ஒரே கலாச்சாரத்திலா இருக்கிறோம். மனித வாழ்வின் அடிப்படை விசயமே சகஜீவிய சகித்து போவதுதான். பல இடங்களில் சைவம் சாப்பிடுறவங்க, அசைவம் சாப்பிடுறவங்களுக்கு வீடு கொடுக்குறது இல்ல. இஸ்லாமியர்களுக்கு குடியிருக்க வீடு கொடுப்பதில்லை. ஆனால், இதெல்லாம் இல்லன்னு சொல்றவங்க பெரிய படிப்பு படித்து, உயர்ந்த பதவியில் இருக்கக்கூடியவர்கள் தான்.
ஆனால், சகிப்புத்தன்மை பதவி ஒன்றும் இல்லாதபோது வெளிப்படுகிறது. அதுவே, ஒரு பதவியில் இருக்கும்போது சகிப்புதன்மை அற்றவனாகிறான். இதில் ஒருவித உளவில் சிக்கல் இருக்கு. இந்த வகையான சிக்கல் தமிழனின் மனதில் அதிகமாகவே இருக்கும்.
எந்த ஊர்லயும் இரவு 3 மணிக்கு மது வாங்கமுடியாது ஆனால் , தமிழகத்தில் இது முடியும். என்னால் படிப்படியாக மதுவை குறைக்க முடியும் என உம்மன்சாண்டி கூறுகிறார். அன்புமணி ராமதாஸ், ‘நான் முதலமைச்சர் ஆனால், ஒரு மணி நேரத்தில் மதுவை ஒழிப்பேன்’ என்கிறார்.  குடி என்பது நோயல்ல, ஆனால் குடிநோயால் பாதிக்கப்பட்ட சமூகம் இது. குடியை நிறுத்தினால் பாதி பேருக்கு பைத்தியம் பிடிச்சுடும். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட அடுத்தநாளே, நம்ம அதிகாரிகளும், அரசாங்கமும் டேங்கரில் கொண்டு வந்து, எல்லா பேருந்து நிலையத்திற்கும் பக்கத்து சந்தில் விற்பனை செய்வாங்க.
இதற்கு காரணம், தமிழனோட வளர்ப்பு, படிப்பு, பத்ரிகைகள், சினிமா மற்றும் போதனைகள் போன்றவைகளில் ஏதோ ஒன்றில் நமக்கு பிரச்னை இருக்கு. நாங்க ஒருசில எழுத்தாளர்கள் குழுவாக மற்ற மாநில நதிகளின் கரையோரங்கள பார்வையிட்டோம். அந்த இடங்களில் ஒரு பாலித்தின் கவரை கூட பார்க்க முடியல. ஆனா, இங்க நாம அப்டி இல்ல.
படங்கள்: வீ. சக்தி அருணகிரி

http://www.vikatan.com/news/tamilnadu/55763-writer-nanjil-nadan-interview.art

நாஞ்சில் நாடன் உரை

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தில் நாஞ்சில் நாடன் உரை

DSC_0222
சிங்கப்பூர் வாசகர் வட்டத்தில் நாஞ்சில் நாடன் உரை
(ஆமருவி தேவநாதன்).
‘எழுத்தாளன் வாழ்வில் புத்தக வெளியீடு என்பது மாபெரும் கொண்டாட்டம்,’ என்று துவங்கினார் நாஞ்சில் நாடன் இன்றைய வாசகர் வட்ட ஆண்டு விழாவில். தனது 42 நூல்களில் இரண்டே வெளியீட்டு விழா கண்டவை என்று சொன்னவர் பின்னர் ‘தமிழும் அதன் சொற்களும்’ என்கிற பொருளில் ஆழ்ந்த உரை ஒன்றைத் துவக்கினார்.
தமிழில் முதலில் சிறு கதை எழுதியது ‘மக்பூல் சாயபு’ என்னும் தகவலுடன் ‘புயலிலே ஒரு தோணி’ என்ற ப.சிங்காரத்தின் நாவலைத்தொட்டு மேலே சென்றார். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி’ என்பதில் ‘வாள்’ என்பது என்ன என்று விளக்கினார். ‘ “உலோகம்” கண்டு பிடிக்கப்படாத காலத்தில் வாளொடு மனிதன் எப்படித் தோன்றியிருக்க முடியும் என்று கேட்கிறார்கள். இவ்விடத்தில் ‘வாள்’ என்பது ஒளி/ஒலி என்னும் பொருளில் வருகிறதே தவிர ‘வாள்’ என்னும் ஆயுதத்தைக் குறிப்பதில்லை’ என்று பாரதிதாசனின் பாடல் ஒன்றைச் சுட்டினார்.
மேலும் பேசுகையில் :
‘ஒரு சொல் பல பொருள்களில் வருவதும், ஒரு பொருளைக்குறிக்கப் பல சொற்கள் இருப்பதும் மொழியின் தொன்மையைக் காட்டுகிறது. யானை என்பதற்குப் பல சொற்கள் உள்ளன. நமக்குத் தெரியவில்லை என்பதால் சொற்கள் இல்லை என்று ஆகிவிடாது. ‘பிறண்டை’ என்னும் தாவரம் பற்றிய குறிப்பு அகநானூற்றில் காணப்படுகிறது. ‘மலைப் பாம்புகள் பிறண்டை போல் கிடக்கும்..’ என்று தலைவி தலைவன் வரும் வழி குறித்துக் கவலைப்படுகிறாள். ‘பிறண்டை’ என்னும் சொல் இன்று நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
இதே போல் சொற்கள் மறக்கபடுவதால் மொழியும் அவை குறிக்கும் பண்பாடும் அழிகின்றன. கம்பன் சுமார் 3,00,000 சொற்களைப் பயன்படுத்தியுள்ளான். மீண்டும் மீண்டும் வரும் சொற்களைத் தவிர்த்துப் பார்த்தால் எப்படியும் ஒரு லட்சம் சொற்கள். அவ்வளவு வளமையான மொழி தமிழ்.
தமிழ் நாடு எழுத்தாளர்களை மதிக்காத ஒரு தேசமாகிவிட்டது. ஆனால் ஒரு காலத்தில் தமிழ்ச் சொல்லுக்கும் எழுத்தாளர்களுக்கும் மிகுந்த ஏற்றம் இருந்துள்ளது. அவர்களது சொல் அவ்வளவு வலிமையானது. மலையமானின் இரு சிறுவர்களைக் கிள்ளிவளவனிடம் இருந்து காத்த கோவூர்க் கிழார் தனது சொல்லால் வெற்றி அடைந்தார். அன்றைய தமிழ்ப் புலவர்களின் நிலை அது.
கேரளம், மகாராஷ்டிரம், வங்காளம் முதலிய மாநிலங்கள் எழுத்தாளனை மதிக்கின்றன. 8 கோடிதமிழ் மக்கள் இருக்கும் நிலத்தில் தமிழ் நாளிதழ்களின் விற்பனை வெறும் 25 லட்சம். 3 கோடி மலையாள மக்கள் 75 லட்சம் இதழ்களை வாங்குகின்றனர். மகாராஷ்டிரத்தில் சுமார் 8 கோடி மக்கள் உள்ள நிலையில் ஒரு ஆண்டில் வெறும் 47 திரைப் படங்களே வெளியிடப்படுகின்றன. ஆனால் அதே அளவு மக்கட்தொகை கொண்ட தமிழகத்தில் சில நூறு படங்கள். எழுத்துக்கும் அதை எழுதுபவர்களுக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது.
நூலகங்களின் நிலை சிங்கையில் மிகச் சிறப்பாக உள்ளது. தமிழ் மக்களிடத்தில் இந்தியாவில் நூல்கள் வாசிக்கும் வழக்கமே இல்லாமல் போய்விட்டது. வெறும் 250 பிரதிகள் அச்சிட்ட நூல்களையே விற்க முடிவதில்லை.
நமது மொழிச் சொற்களை நாம் தவற விட்டுவிட்டோம். ‘அருவி’ என்னும் சொல் இருக்க ‘நீர் வீழ்ச்சி’ என்று நேரிடையான தமிழாக்கம் பயன்பாட்டில் உள்ளது. மலையாளத்தில் ‘நீர் வீழ்ச்சி’ என்பது ஜலதோஷம் என்னும் பொருளில் வருகிறது.
கம்பன் ‘சொல் ஒக்கும் சுடுசரம்’ என்று இராமபாணத்தைக் கூறுவான். அம்புக்கு நிகராகச் சொல் இருந்த ஒரு காலம் ஒன்று உண்டு.
தமிழில் வேற்று மொழிச் சொற்கள் சேர்ப்பது இயல்பே. ஆனாலும் அவை இலக்கணமுறைப்படியே இருத்தல் வேண்டும். ‘தற்சமம்’, ‘தற்பவம்’ என்னும் இரு முறைகளின்படி அமைதல் வேண்டும். கம்பன் கூட தாமரை என்னும் சொல்லிற்கு பங்கயம், நாளினம், அரவிந்தம், கமலம் என்றும் வட சொற்களைத தமிழ் இலக்கணப்படி உள்ளே கொண்டுவந்து செழுமையூட்டினான்.’
இன்னும் பல செய்திகள் நிறைந்த அவரது பேச்சில் திருமுருகாற்றுப்படை, கம்பராமாயணம், அகநானூறு, புறநானூறு, திருப்பாவை என்று மாறி மாறி வந்து செவிக்கு விருந்தளித்தன.
நல்ல மனிதர், சிறந்த எழுத்தாளர், உருப்படியான தகவல்கள் செறிந்த பேச்சாளர், என்று பல முகங்கள் கொண்ட நாஞ்சில் நாடன் அவர்களின் இன்றைய பேச்சில் , ஆண்டாளின் ‘புள்ளின்வாய்க் கீண்டானை’ பாசுரமும், ‘உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்’ பாசுரமும் இடம்பெற்றன.

ரஜத் குப்தா : மாபெரும் வீழ்ச்சி

ரஜத் குப்தா : மாபெரும் வீழ்ச்சி

உலக நிதி அமைப்புகளில் மிகப் பெரும் பதவிகளில் இந்தியர்களை இப்போது சர்வசாதாரணமாகப் பார்க்க முடி கிறது. ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன் அப்படி இருந்ததில்லை. அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் மாபெரும் உலக கார்பொரேட் சாம்ராஜ்ஜியத்தின் உச்சத்தைத் தொட்ட முதல் சில இந்தியர்களில் ரஜத் குப்தாவுக்கு முக்கிய மான இடம் உண்டு.
ரஜத் குப்தா 1994 முதல் 2003 வரை மெக்கின்சி அண்ட் கோ என்ற ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தார். இந்தப் பதவியை வகித்த முதல் இந்தியர், ஒரே ஒரு இந்தியர் இவரே. 1971-ம் ஆண்டு, ஐஐடி தில்லியில் மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்ற இவர், ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலிலிருந்து 1973-ல் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.
மெக்கின்சி கன்சல்ட்டிங்கில் வேலைக்குச் சேர்வதையே பெருமையாக மாணவர்கள் மதிக்கும் காலகட்டம் அது. அதில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து கம்பெனி யின் நிர்வாக இயக்குனராக ஆனார். இந்தியர்களால் மட்டுமல்ல, தொழில் உலகில் அனைவராலும் மதிக்கப்பட்டார்.
மெக்கின்சியிலிருந்து 55 வயதில் வெளியேறியபின் இவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. கோல்ட்மன் சாக்ஸ், ப்ராக்டர் அண்ட் கேம்பிள், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போன்ற கம்பெனிகள், இவரை தங்கள் இயக்குனராக அவைக்கு அழைத்தன.
இவருடைய ஆலோசனைகளால் தம்முடைய நிறுவனம் வேகமாக முன்னேறும் என்று அவர்கள் நிஜமாகவே நினைத்தனர். இன்று ரஜத் குப்தா, மோசடிக் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு, 12 ஆண்டுகள் வரை சிறையில் தள்ளப்படும் நிலைக்கு வந்துள்ளார்.
அப்படி என்னதான் தவறு செய்துவிட்டார் ரஜத் குப்தா?
இயக்குனர் அவையில் இருக்கும் நான்-எக்சிகியூட்டிவ் இயக்குனர் (Non Executive Director) தான் ரஜத் குப்தா. அவரால் கம்பெனியின் பணத்தை எந்த விதத்திலும் நேரடியாகக் கையாள முடியாது. பணம் திருடினார் என்பதல்ல அவர்மீதான குற்றச்சாட்டு. ஆனால் ரகசியத் தகவல்களை தன் நண்பர் ஒருவருக்குக் கசியவிட்டு அதன்மூலம் பங்குச்சந்தையில் உள்ள பல்லாயிரம் மக்களை ஏமாற்றி தானும் நண்பரும் லாபம் சம்பாதிக்க வழிவகை செய்தார் என்பதுதான் அவர்மீதான குற்றச்சாட்டு.
ரஜத் குப்தாவின் நண்பர், இலங்கையைச் சேர்ந்த ராஜ் ராஜரத்தினம் என்பவர். ராஜ், காலியான் ஹெட்ஜ் ஃபண்ட் என்ற நிறுவனத்தை நடத்திவந்தார். இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி விற்று லாபம் சம்பாதிக்க முற்படும் ஒரு நிறுவனம். ரஜத் குப்தா கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தில் இயக்குனராக இருந்தபோது தனக்குக் கிடைத்த இரண்டு முக்கியமான தகவல்களை ராஜரத்தினத்துக்குக் கொடுத்து அதன்மூலம் ராஜரத்தினம் லாபம் அடைந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளனர்.
கோல்ட்மன் சாக்ஸ் என்பது ஒரு நிதி நிறுவனம். 2008-ல் அமெரிக்க நிதி அமைப்புகள் பயங்கரமாக ஆட்டம் கண்டன. வீட்டுக் கடன் நிறுவனங்களில் நிகழ்ந்த சில குளறுபடிகள், மொத்த நிதி அமைப் பையே குலைத்துவிட்டன. லெஹ்மன் பிரதர்ஸ் என்ற பெரும் நிறுவனம் திவால் ஆனது. இந்தக் கட்டத்தில், கோல்ட்மன் சாக்ஸ் முதல் பலரும் எங்கிருந்தாவது நிதி முதலீட்டைப் பெறும் முயற்சியில் இருந்தனர். உலகின் மிக சாமர்த்தியமான முதலீட்டாளர் என்று பெயர் பெற்றுள்ள வாரன் பஃபட், கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்தார். 23 செப்டெம்பர் 2008 அன்று நடந்த இயக்குனர் சந்திப்பில் இதனை கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் இதனை வெளி உலகுக்கு வெளியிடவில்லை.
சந்திப்பிலிருந்து வெளியே வந்த ரஜத் குப்தா தன் நண்பர் ராஜரத்தினத்துக்குத் தொலைபேசியில் இந்தத் தகவலைத் தெரிவிக்க, ராஜ் கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அன்று சந்தை முடிவதற்கு முன்னரே வாங்கிப் போட்டார். மறுநாள் பஃபட் செய்தி வெளியாக, கோல்ட்மன் பங்குகள் சரேலென மேலே ஏறின. ராஜுக்குப் பெரும் லாபம்.
அக்டோபர் 2008-ல், கோல்ட்மன் சாக்ஸ் தன் காலாண்டு வரவு செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யவேண்டிய நேரம். கோல்ட்மன் சாக்ஸ் பங்குச்சந்தைக்கு வந்தபின் அதுநாள் வரையில் நஷ்டம் அடைந்ததே இல்லை. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள், அந்தக் காலாண்டிலும் அப்படியேதான் இருக்கும் என்று நம்பினார்கள். ஆனால் அம்முறை நஷ்டம். இயக்குனர் அவை சந்திப்பு நடந்துகொண்டிருக்கும்போது இந்தத் தகவலை ரஜத் குப்தா ராஜுக்கு அனுப்பியுள்ளார். உடனேயே சந்தை முடிவதற்குள்ளாக ராஜ் தன் கையில் இருந்த கோல்ட்மன் சாக்ஸ் பங்குகளை விற்றுவிட்டார். மறுநாள் உண்மைத் தகவல் தெரிந்ததும் பங்குச்சந்தையில் கோல்ட்மன்  சாக்ஸ் பெரும் வீழ்ச்சி அடைந்தது. ராஜ் மட்டும் நஷ்டத்திலிருந்து தப்பிவிட்டார்.
ராஜ் இதுபோன்ற சித்து விளையாட்டுகளில் ஈடுபடுகிறார் என்பதை மோப்பம் பிடித்திருந்த புலனாய்வு அமைப்பினர், அவருடைய தொலைபேசியை ஒட்டுக்கேட்க ஆரம்பித்தனர். கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, ராஜ்மீது வழக்கு தொடுத்தனர். அவருக்கு பதினோரு ஆண்டுகள் சிறை தண்டனையும் வாங்கிக் கொடுத்தனர். ஆனால் அந்தச் சமயத்தில் ரஜத் குப்தாமீது எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. அவரிடமிருந்துதான் தகவல் கசிந்திருக்கவேண்டும் என்று யூகித்த புலனாய்வுத் துறை, அவரைக் கடுமையாகக் கண்டித்தது. அவர்மீது அபராதம் விதிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
ரஜத் குப்தா பேசாமல், அபராதம் கட்டியிருக்கலாம். மாறாக, நீதிமன்றம் சென்றார். தன்னை அவதூறு செய்கிறார்கள் என்றார். புலனாய்வுத் துறை பொறுமையாக மேற்கொண்டு சாட்சியங்களைச் சேகரித்தது. ரஜத் குப்தாமீது வலுவான வழக்கைப் பதிவு செய்தது. இன்று 12 ஆண்டுகள் சிறைவாசத்தை எதிர்நோக்கியிருக்கிறார் ரஜத் குப்தா.
தகவலை வெளியே சொல்வது ஒரு குற்றமா? அதற்குப்போய் 12 ஆண்டுகள் சிறையா என்று இந்தியர்கள் அதிசயப்படலாம். நம் நாட்டில் பெரும் மலையை முழுங்கி ஏப்பம் விட்டாலும் தண்டனை எல்லாம் கிடைக்காது. வழக்கு நடக்கவே பல ஆண்டுகள் ஆகும். ஆனால் அமெரிக்க நீதிமன்ற முறை வேறு. அங்கு வழக்குகள் விரைவாக நடக்கும். தவறு என்று கண்டறியப்பட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும். மேல்முறையீடு உண்டு, ஆனால் அதுவும் வேகமாக நடக்கும். ஒன்று தண்டனை, இல்லை விடுதலை. மிக விரைவாக.
ரஜத் குப்தா செய்தது மாபெரும் தவறு. நம்பிக்கை மோசடி மட்டுமல்ல, உள்தகவலை வைத்துக்கொண்டு பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கும் ‘இன்சைடர் டிரேடிங்’ என்று சொல்லப்படும் குற்றம்.
ரஜத் குப்தாவின் நண்பர்கள் அவர் சார்பாக வாதாடுகிறார்கள். இது அபத்தமானது. குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டபிறகும் குற்றவாளி நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பேசுவது அசிங்கம். இந்தியாவிலும் நிச்சயமாக இன்சைடர் டிரேடிங் நடக்கிறது. ஆனால் இந்திய முறையில் செபி என்ற அமைப்பு, இந்தத் தவறு தெரியவரும்போது அதிகபட்சமாகக் கொஞ்சமாக அபராதம் போடும். உதாரணமாக, அனில் அம்பானியின் சில நிறுவனங்கள் இன்சைடர் டிரேடிங்கில் ஈடுபட்டதை செபி கண்டுபிடித்தது. அவர்களைச் செல்லமாகக் கடிந்துகொண்டு இயக்குனர்கள்மீது 25 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அவ்வளவுதான்! அவர்கள் எத்தனை கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தார்களோ, எத்தனை அப்பாவி மக்களின் பணம் நஷ்டமானதோ. முகேஷ் அம்பானி மீதும் இன்சைடர் டிரேடிங் வழக்குகள் சில உள்ளன.
செபியிடம் தங்கியுள்ள இன்சைடர் டிரேடிங் வழக்குகளைச் சேர்த்தால், 50,000 கோடி ரூபாய்க்கும் மேலான மோசடிகள் என்று தெரிய வருகிறது. செபியிடம் வராத வழக்குகள் இன்னும் எத்தனை எத்தனை கோடிகளோ இருக்கலாம்.
இங்குதான் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான வித்தியாசம் உள்ளது. பொதுமக்களை பாதிக்கும் எந்த விஷயத்திலும் அமெரிக்கா தெளிவான சட்டங்களைக் கொண்டுள்ளது. திறமையான புலனாய்வு அமைப்புகளைக் களத்தில் இறக்குகிறது. நல்ல வக்கீல்களைக் கொண்டு நீதிமன்றத்தில் வாதாடுகிறது. ரஜத் குப்தா வழக்கைக் கையாண்டவரும் ஓர் இந்தியர்தான். மன்ஹாட்டன் மாவட்ட அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா என்பவர். நீதிமன்றங்களும் உடனடியாக வழக்கை விசாரித்துத் தீர்ப்பு சொல்கிறார்கள். மக்களுக்கு நீதியின்மீது நம்பிக்கை வருகிறது.
இது எதுவுமே இந்தியாவில் நடப்பதில்லை. இது உடனடியாகச் செயல்படுத்துவதில்தான் நம் எதிர்காலமே அடங்கியுள்ளது.

கருத்தியல் ஆயுதங்கள்

அம்பேத்கரின் இரண்டாவது ஆயுதம்

Updated On : 4:45 am | May 9, 2016

சாதியொழிப்பில் அம்பேத்கர் பயன்படுத்திய கருத்தியல் ஆயுதங்கள்பற்றி ஒரு பார்வை

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மாபெரும் போராளியாக இருக்கும் அதே நேரத்தில், உலகெங்கும் மதிக்கப்படும் மகத்தான அறிஞராகவும் இருப்பது டாக்டர் அம்பேத்கரின் தனிச்சிறப்பு. சாதிக்கு எதிரான யுத்தத்தில் அம்பேத்கரின் கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருந்தன. ஒன்று, இடைவிடாத களச்செயல்பாடு. இன்னொன்று, கருத்தியல் ஆயுதம். இந்த இரண்டு ஆயுதங்களையும் தன் வாழ்நாள் முழுவதும் கூர்மையாகத் தீட்டிக்கொண்டும், லாவகமாகப் பயன்படுத்தியும் வந்திருக்கிறார் அவர். கருத்தியலைப் பொறுத்தவரை அவரது வலுவான ஆயுதங்களுள் ‘இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் தோற்றம் வளர்ச்சி’ என்ற ஆய்வுக் கட்டுரையும், ‘சாதியை அழித்தொழித்தல்’ நூலும் அடங்கும்.

‘இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் தோற்றம் வளர்ச்சி என்கிற ஆய்வுக் கட்டுரை’ மே 9, 1916-ல் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடந்த மானுடவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. அம்பேத்கர் தனக்கு முன்னதான ஆய்வாளர் களின் கருத்துகளை ஏற்றும் எதிர்த்தும் இதில் தெளிவாக்குகிறார்.

சாதியும் அகமண வழக்கமும் ஒன்றே!

தொடக்க காலச் சமுதாயங்களில் புறமண வழக்கம் தான் உண்டு என்பதைக் காட்டி, இந்தியர்களுக்கு அகமண முறை அந்நியமானது என்கிறார். (புற மணம்: வெவ்வேறு இனக் குழுக்களிடையே ஏற்படும் திருமண உறவு, அக மணம்: ஒரே குழுவுக்குள் ஏற்படும் திருமண உறவு). ஆனால், ‘நம்மிடையே சாதிகள் உள்ளனவே இது எதனால்?’ என்ற கேள்வியை எழுப்பி, ‘ஆய்ந்து பார்த்தோமானால் இந்தியாவைப் பொறுத்த மட்டில், புறமணத்தைவிட அகமணத்துக்கு உயர்வான இடம் அளிக்கப்பட்டதன் விளைவுதான் சாதிகளின் உருவாக்கம்’ என்று விடையளிக்கிறார்.

‘திருமண வயதொத்த ஆண்கள்-பெண்கள் சமநிலை குலையும் நிலையில் அகமண ஒழுக்கம் அழிந்துபோகும்’ என்பதை விவரித்து ‘இந்தச் சமநிலை குலையாமல் பாதுகாப்பதிலேயே சாதியச் சிக்கல் என்பது சுழல்கிறது’ என்பதைச் சான்றுகள் வழியாக நிறுவுகிறார்.

திருமணம் ஆன ஆண் இறந்துபோனால், அவனது மனைவியைத் தீயில் தள்ளுவதும் (சதி) அல்லது கட்டாயமாக விதவைக் கோலத்தைப் பூணச் செய்வதும் நடைமுறைகள். பெண் இறந்து ஆண் இருந்தால் – ‘குழுவுக்கு ஆண் முக்கியமானவன்; அதனினும் அகமண வழக்கம் முக்கியமானது’ என்பதால் பெண்களுக்குச் செயல்படுத்தும் மேற்கண்ட முறைகள் ஆண்களுக்குப் பேணப்படுவதில்லை. மாறாக, அவனாக விரும்பித் துறவு மேற்கொள்வது நடக்கலாம் என்பதை அம்பேத்கர் விளக்குகிறார். குழுவுடன் அந்த ஆணை இணைத்துக் கொள்ள, திருமணப் பருவம் எய்தாத ஒரு பெண் குழந்தையை மணம் முடித்தல் நடைபெறுகிறது.

இந்த நடைமுறைகளின்படி ‘சாதியும் அகமண வழக்கமும் ஒன்றே’ என்றாகிறது. இதுபோன்ற வழி வகைகள் இருப்பது சாதியை ஒத்தது. சாதி இந்த வழிவகைகளை உள்ளடக்கிக்கொண்டு இயங்குகிறது’ என்ற முடிவுக்கு அவர் வருகிறார்.

தாழிடப்படும் கதவுகள்

மேல்நாட்டு அறிஞர்கள், இந்தியாவில் சாதி உருவாவதற்குக் கீழ்க்கண்ட காரணங்களைச் சொல் கிறார்கள்: 1. தொழில், 2. பழங்குடியினர் அமைப்புகளின் எச்சங்கள், 3. புதிய நம்பிக்கைகளின் தோற்றம், 4. கலப்பின விருத்தி, 5. குடிப்பெயர்வு. ‘இவையெல்லாம் பிற சமூகங்களில் இல்லையா? இருந்தால் உலகின் பிற சமூகங்களில் ஏன் சாதி உருவாகவில்லை?’ என்ற கேள்வியை எழுப்பி, ‘கூர்ந்து நோக்கும் நமக்கு அவை வெறும் கற்பனைக் காட்சிகளாகவே தெரிகின்றன’ என்று மறுக்கிறார் அம்பேத்கர். அவ்வாறெனில், சாதி எவ்வாறு உருப்பெற்றிருக்கும்? ‘கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளும் கொள்கை’யை (குளோஸ்டு டோர் பாலிஸி) சாதியின் தோற்றத்துக்குக் காரணமாக அம்பேத்கர் முன்வைக்கிறார்.

இங்கு இரண்டு கேள்விகளை அம்பேத்கர் எழுப்புகிறார்.

1. இந்த மக்கள் பிறரோடு கலவாமல் தனித்தியங்கு மாறு கட்டாயப்படுத்தப்பட்டார்களா?

2. (அல்லது) அவர்களாகவே தனித்து இருப்பதற்காகக் கதவுகளைத் தாழிட்டுக்கொண்டார்களா?

இரண்டுமே நடந்திருக்கிறது என்று அம்பேத்கர் விடையளிக்கிறார்.

போலச் செய்தல்

சாதியத்தின் பரவலாக்கலுக்குக் காரணமாகப் ‘போலச் செய்தல்’ என்கிற ஒன்றின் வழியாகத்தான் அகமண முறை, கதவடைப்பு போன்றவை நிகழ்ந்து, சாதியம் பரவியது என்று அம்பேத்கர் நிறுவுகிறார். ஆக, சாதி என்பதை ஒற்றையாக அம்பேத்கர் பார்க்கவில்லை. சாதிகள் என்று பார்க்கிறார். ‘பார்ப்பனர்கள் தங்களைத் தனியாக ஒரு சாதியென்று ஆக்கிக் கொண்டதன் விளைவாகப் பார்ப்பனரல்லாதோர் என்றொரு சாதி உருவாக நேர்ந்தது’ என்கிறார். விலக்கி வைக்கப்பட்டவர்கள் தாங்களே ஒரு தனிச் சாதியாக ஆகும்படி தூண்டுதல் என்பது ஒரு கள்ளத்தனமான செயல்திட்டம். இந்தத் திட்டத்தின் விளைவாகத்தான் பல்வேறு சாதிகள் உருவாகியுள்ளன என்கிறார் அம்பேத்கர்.

இரு நிலைகளில் அவரது கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக, தனது ஆய்வுக்கு உட் படுத்தும் பொருளைத் தன் நிலையிலிருந்து அதாவது, தான் அனுபவித்த வேதனைகள், அவமானங்கள் ஆகியவற்றின் வழியாக அடையாளம் கண்டு வளர்த்தெடுத்தல். இதனூடாக, ஆய்வுப் பொருள் சார்ந்து உலகளாவிய நிலையில் உள்ள தரவுகளை ஒப்பிட்டுக் காட்டி விவாதித்தல்; அறிவுஜீவிகளின், கோட்பாட்டாளர்களின் பார்வையிலிருந்து மட்டு மல்லாமல், தான் எடுத்துக்கொள்ளும் ஆய்வுப் பொருண்மை பொதுமக்களின் பார்வையில், பயன் பாட்டில் எவ்வாறு உள்ளது என அணுகுதல்; எடுத்துக்

காட்டாக, சாதியம் சார்ந்த வெகுமக்களின் நம்பிக்கை, அவர்களின் செயல்பாடுகள் (போலச் செய்தல், கதவடைத்துக்கொள்ளுதல்) போன்றவற்றைக் கணக்கில் கொண்டு அணுகுதல். அம்பேத்கரின் இவ்வகை அணுகுமுறையை அவரது பல்வேறு ஆய்வுகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். இந்த ஆய்வுரை மானுடவியல் மாணவர்களுக்கு மானுடவியல் சார்ந்த முறையியலோடு நிகழ்த்தப்பட்டது நினைவில் கொள்ளத் தக்கது.

இரண்டாவதாக, அம்பேத்கர் சாதிகளின் தோற்றம், வளர்ச்சியை நிறுவுவதற்குப் பாலின அரசியலைக் கைக்கொள்கிறார். அதாவது, பெண்ணினம், ஆணினம் சார்ந்து. திருமணம் செய்துகொண்ட பின்புதான் ஒரு பெண்ணும் ஆணும் சமூக அங்கீகாரம் பெறுகிறார்கள். தம்பதியரில் யாராவது ஒருவரின் இறப்புக்குப் பின் உயிரோடு இருப்பவர்களைச் சமூகம் எப்படி நடத்துகிறது? மேலும், புறமணம், அகமணம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, மணமுறையில் இணையும் பெண், ஆண் சார்ந்து சாதியத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் அம்பேத்கர் நிறுவுகிறார். சாதியத்தின் பரவலுக்குச் சமயம் சார்ந்த சடங்கியல் அதிகாரம், கதவடைப்பு, அகமண முறை, போலச் செய்தல் போன்ற செயல்பாடுகளை எடுத்துக்காட்டி நிறுவுகிறார்.

இத்தகைய பண்பாட்டு ஆய்வு, நம் அனைவரையும் பாதிக்கும் அதிகார அமைப்பாகச் சாதியை அடையாளப் படுத்துவது மட்டுமல்ல; சாதிப் பிரச்சினையைத் தலித் பிரச்சினை என்பதோடு சுருக்கிவிடாமல், சாதி ஒழிப்புப் போராட்டத்தில் அனைவருக்கும் உள்ள பங்கை உணர்த்துவதாகவும் இருக்கிறது.

– கோ. பழனி,

‘பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள்’ என்ற நூலின் பதிப்பாசிரியர், உதவிப் பேராசிரியர்,

சென்னைப் பல்கலைக்கழகம்,

தொடர்புக்கு: elaezhini@gmail.com

Image